< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் கிராமங்கள் விவரம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் கிராமங்கள் விவரம்

தினத்தந்தி
|
24 May 2022 1:44 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் கிராமங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் 1431-ம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) 4 தாலுகாக்களிலும் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவும், வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணியும், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பால்பாண்டியும், ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலால் உதவி ஆணையர் ஷோபாவும் நாளை காலை 9 மணிக்கு ஜமாபந்தியை தொடங்கி வைக்கின்றனர்.

மேலும் 4 தாலுகாக்களில் ஜமாபந்தி நடைபெறும் வருவாய் கிராமங்கள் விவரம் வருமாறு:-

பெரம்பலூர்-வேப்பந்தட்டை

பெரம்பலூர் தாலுகாவில் நாளை குரும்பலூர் (தெற்கு, வடக்கு), மேலப்புலியூர் (கிழக்கு, மேற்கு), லாடபுரம் (மேற்கு, கிழக்கு), அம்மாபாளையம், களரம்பட்டி, சத்திரமனை ஆகிய கிராமங்களிலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பொம்மனப்பாடி, வேலூர், எசனை, அலங்கிழி, கீழக்கரை, எளம்பலூர், செங்குணம், துறைமங்கலம், பெரம்பலூர் (தெற்கு, வடக்கு) ஆகிய கிராமங்களிலும், 27-ந்தேதி அரணாரை (வடக்கு, தெற்கு), புதுநடுவலூர், சிறுவாச்சூர், நொச்சியம், கல்பாடி (வடக்கு, தெற்கு), அயிலூர் ஆகிய கிராமங்களிலும் ஜமாபந்தி நடக்கிறது.

இதேபோல் வேப்பந்தட்டை தாலுகாவில் நாளை உடும்பியம், பூலாம்பாடி (கிழக்கு, மேற்கு), வெங்கனூர், தழுதாழை, அரும்பாவூர், மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை (மேற்கு, கிழக்கு), வெங்கலம் (மேற்கு, கிழக்கு), வேப்பந்தட்டை (வடக்கு, தெற்கு), வெண்பாவூர் ஆகிய கிராமங்களிலும், நாளை மறுநாள் பெரியவடகரை, நூத்தப்பூர் (தெற்கு, வடக்கு), பில்லாங்குளம், கை.களத்தூர் (மேற்கு, கிழக்கு), காரியானூர், பசும்பலூர் (வடக்கு, தெற்கு), பாண்டகபாடி, திருவாளந்துறை, அகரம் ஆகிய கிராமங்களிலும், 27-ந்தேதி தொண்டபாடி, நெய்குப்பை, அனுக்கூர், பிரம்மதேசம், மேட்டுப்பாளையம் (தெற்கு, வடக்கு), பிம்பலூர், வி.களத்தூர், பேரையூர், எறையூர், தேவையூர் (வடக்கு, தெற்கு), வாலிகண்டபுரம் ஆகிய கிராமங்களிலும் ஜமாபந்தி நடக்கிறது.

குன்னம்-ஆலத்தூர்

குன்னம் தாலுகாவில் நாளை திருமாந்துறை, பென்னகோணம் (வடக்கு, தெற்கு), வடக்கலூர், ஒகளுர் (மேற்கு, கிழக்கு), சு.ஆடுதுறை, அத்தியூர் (வடக்கு, தெற்கு), கிழுமத்தூர் (வடக்கு, தெற்கு), அகரம்சீகூர், வசிஸ்டபுரம், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி ஆகிய கிராமங்களிலும், நாளை மறுநாள் கீழப்புலியூர் பகுதிக்கு உட்பட்ட நன்னை (கிழக்கு, மேற்கு), பெருமத்தூர் (வடக்கு, தெற்கு), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வடக்கு, தெற்கு), எழுமூர் (மேற்கு, கிழக்கு), மழவராயநல்லூர், ஆண்டிகுரும்பலூர், அசூர், சித்தளி (கிழக்கு, மேற்கு), பேரளி (வடக்கு, தெற்கு), ஒதியம் ஆகிய கிராமங்களிலும், 27-ந்தேதி ஓலைப்பாடி (கிழக்கு, மேற்கு), பரவாய் (மேற்கு, கிழக்கு), புதுவேட்டக்குடி, துங்கபுரம் (வடக்கு, தெற்கு), காடூர் (வடக்கு, தெற்கு), கொளப்பாடி, வரகூர், குன்னம், பெரியம்மாபாளையம், பெரியவெண்மணி (மேற்கு, கிழக்கு) ஆகிய கிராமங்களிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

ஆலத்தூர் தாலுகாவில் நாளை நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், மாவிலங்கை, சிறுவயலூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புதுஅம்மாபாளையம், கண்ணப்பாடி, தேனூர், இரூர், பாடாலூர் (மேற்கு, கிழக்கு) ஆகிய கிராமங்களிலும், நாளை மறுநாள் கொட்டரை, சாத்தனூர், சிறுகன்பூர் (கிழக்கு, மேற்கு), வரகுப்பாடி, காரை (கிழக்கு, மேற்கு), தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் (மேற்கு, கிழக்கு) ஆகிய கிராமங்களிலும், 27-ந்தேதி தொண்டபாடி, மேலமாத்தூர், அழகிரிபாளையம், ஆதனூர் (வடக்கு, தெற்கு), கூடலூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், திம்மூர், சில்லக்குடி (தெற்கு, வடக்கு), ஜெமீன் ஆத்தூர் ஆகிய கிராமங்களிலும் ஜமாபந்தி நடக்கிறது.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்