< Back
மாநில செய்திகள்
மின் இணைப்புகள் விவரம்
அரியலூர்
மாநில செய்திகள்

மின் இணைப்புகள் விவரம்

தினத்தந்தி
|
26 Nov 2022 1:37 AM IST

மின் இணைப்புகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 984 வீட்டு மின் இணைப்புகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 657 வீட்டு மின் இணைப்புகளும் உள்ளன. இதே போல் கைத்தறி மின் இணைப்புகள் அரியலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 162-ம், பெரம்பலூர் மாவட்டத்தில் 8-ம் உள்ளன. குடிசை வீட்டு மின் இணைப்புகள் அரியலூர் மாவட்டத்தில் 18 அயிரத்து 319-ம், பெரம்பலூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 256-ம், விசைத்தறி மின் இணைப்புகள் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 22 உள்ளன. விவசாய மின் இணைப்புகள் அரியலூர் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 171-ம், பெரம்பலூர் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 1-ம் உள்ளன.

மேற்கண்ட மின் இணைப்புகளுக்கு தான் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. தற்போது மேற்கண்ட மின் இணைப்புகளில் நேற்று முன்தினம் வரை அரியலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 635 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 880 பேரும் என 3 ஆயிரத்து 515 பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக நோக்கத்துடன் செயல்படும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கடைகள் மின் இணைப்புகள் அரியலூா் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 290-ம், பெரம்பலூர் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 691-ம் உள்ளன. அரசு அலுவலக மின் இணைப்புகள் அரியலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 221-ம், பெரம்பலூர் மாவட்டத்தில் 855-ம், தனியார் அலுவலக மின் இணைப்புகள் அரியலூர் மாவட்டத்தில் 150-ம், பெரம்பலூா் மாவட்டத்தில் 140-ம் உள்ளன.

மேலும் செய்திகள்