தமிழகத்தில் செப்.1 முதல் கட்டணம் உயர்த்தப்பட இருக்கும் 28 சுங்கச்சாவடிகளின் விபரம்
|செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 28 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1 ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரை உயரவுள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் திருச்சி சமயபுரம் சுங்கசாவடி, திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம் சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சேலம் ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், வீரசோழபுரம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், குமாரபாளையம் விஜய மங்கலம், விழுப்புரம் விக்கிரவாண்டி மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி உட்பட 28 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.