< Back
மாநில செய்திகள்
3,900 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

3,900 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

தினத்தந்தி
|
23 Jun 2023 11:38 PM IST

தமிழக- ஆந்திர எல்லையில் 3,900 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வழிகாட்டுதலின்படி, ஆந்திர மாநில போலீசாரும், திருப்பத்தூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் இணைந்து தமிழ்நாடு- ஆந்திர மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியான தேவராஜபுரம் மலைப்பகுதி மற்றும் சுற்று பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 37 போலீசார் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.

அப்போது 245 லிட்டர் சாராயம், 3,900 லிட்டர் சாராய ஊறல், சாராய ஊறல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அழிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயத்தை முழுமையாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்