< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 32,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு
|20 Jun 2023 2:33 PM IST
மொத்தம் 6,550 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேலூர்,
தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். வனப்பகுதிகளில் கள்ளச்சாராய ஊறல்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் கடந்த ஒரு மாதத்தில் 32,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 6,550 லிட்டர் கள்ளச்சாராயம், 2,625 மது பாட்டில்கள், 1.98 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.