< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
|17 March 2023 12:15 AM IST
கல்வராயன்மலையில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கச்சிராயப்பாளையம்
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்ட போலீசார் கல்வராயன்மலை அடிவாரப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கல்படை ஓடை அருகே 15 பேரல்களில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே கல்வராயன்மலை அடிவார பகுதியில் உள்ள மல்லிகைப்பாடி, துருவூர் ஆகிய கிராம பகுதிகளிலும் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.