< Back
மாநில செய்திகள்
வனப்பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராயம் கொட்டி அழிப்பு
சேலம்
மாநில செய்திகள்

வனப்பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராயம் கொட்டி அழிப்பு

தினத்தந்தி
|
5 Jan 2023 1:02 AM IST

தலைவாசல் அருகே வனப்பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராயம் கொட்டி அழிக்கப்பட்டது.

தலைவாசல்:-

தலைவாசல் அருகே வனப்பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராயம் கொட்டி அழிக்கப்பட்டது.

சாராயம் கொட்டி அழிப்பு

தலைவாசல் அருகே கரிய கோவிலை அடுத்த மண்ணூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக ஆத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் ஏட்டுகள் முனிராஜ், செல்வம், சீனிவாசன், சதீஷ்குமார் ஆகியோர் வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 9 பேரல்களில் சாராய ஊறல்கள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை அழித்து எரித்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராயத்தையும் போலீசார் கைப்பற்றி கொட்டி அழித்தனர்.

வழக்குப்பதிவு

போலீசாரை கண்டதும், சாராய ஊறல் போட்டவர்கள் அங்கிருந்து தப்பிஓடி விட்டனர். இதையடுத்து சாராயம் காய்ச்சியவர்கள் மீது ஆத்தூர் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்