< Back
மாநில செய்திகள்
வேலூர் மற்றும் குடியாத்தம் மலைப்பகுதிகளில் 17,350 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு - போலீசார் நடவடிக்கை
மாநில செய்திகள்

வேலூர் மற்றும் குடியாத்தம் மலைப்பகுதிகளில் 17,350 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு - போலீசார் நடவடிக்கை

தினத்தந்தி
|
23 April 2023 7:35 PM IST

மலைப்பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 17,350 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை போலீசார் அழித்தனர்.

வேலூர்,

வேலூர் மற்றும் குடியாத்தம் மலைப்பகுதிகளில் கள்ளச்சாரம் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு போலீசார் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது அங்கு கள்ளச்சாராய ஊரல்கள் பதுக்கி வைக்கப்பட்டிப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 17,350 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை போலீசார் அழித்தனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்