< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
கதண்டுகள் தீ வைத்து அழிப்பு
|23 March 2023 12:15 AM IST
மன்னார்குடி அருகே கதண்டுகள் தீ வைத்து அழிப்பு
மன்னார்குடி:
மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் 3-ம் சேத்தி ஊராட்சி கருவகுளம் அருகே நேற்று முன்தினம் ஆட்டுக்கு தழை பறிக்க சென்ற சிறுமி உள்ளிட்ட 6 பேரை, அந்த பகுதியில் மரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டுகள் கடித்து காயப்படுத்தின. இது குறி்த்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தில் கூடு கட்ட யிருந்த விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.