< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
திருமணம் ஆகாத விரக்தியில்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|3 Sept 2023 2:29 AM IST
திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்
ஈரோடு வாய்க்கால்மேடு சடையப்பம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் பிரசாந்த் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். எனினும் வரன் சரியாக அமையவில்லை என தெரிகிறது. இதனால் பிரசாந்த் கடந்த சில நாட்களாக திருமணம் ஆகாத விரக்தியில் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரசாந்த் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பிரசாந்த் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.