< Back
மாநில செய்திகள்
மனைவி நடத்தையில் சந்தேகத்தால் விரக்தி ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

மனைவி நடத்தையில் சந்தேகத்தால் விரக்தி ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை

தினத்தந்தி
|
29 Nov 2022 2:53 PM IST

மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விரக்தி அடைந்த ஆட்டோ டிரைவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம், புதிய திரு.வி.க நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 50). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி அரசு (46). இவர்களுக்கு திருமணம் ஆகி 32 வருடங்கள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நல்லதம்பிக்கு அவருடைய மனைவி அரசு நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி அவருடன் சண்டை போட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு இது ெதாடர்பாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இரவில் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த நல்லசாமி, படுத்து தூங்கினார். நேற்று காலை 7 மணியளவில் எழுந்த நல்லசாமி, திடீரென குளியல் அறைக்குள் சென்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறிதுடித்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நல்லசாமி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்