< Back
மாநில செய்திகள்
குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாச பேச்சு - மன்னிப்பு கேட்ட கனிமொழி எம்.பி
மாநில செய்திகள்

குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாச பேச்சு - மன்னிப்பு கேட்ட கனிமொழி எம்.பி

தினத்தந்தி
|
28 Oct 2022 9:00 AM IST

குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியதற்கு, திமுக எம்.பி கனிமொழி டுவிட்டர் மூலம் மன்னிப்பு கோரினார்.

சென்னை,

திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், பாஜக நிர்வாகியான குஷ்பு குறித்து ஆபாசமாக பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள குஷ்பு, இதுதான் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான புதிய திராவிட மாடல் ஆட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், பெண்ணாகவும், மனித நேயத்துடனும் மன்னிப்பு கேட்பதாக கனிமொழி எம்பி டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.

யாராக இருந்தாலும் இதுபோன்ற பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள கனிமொழி, தனது கட்சியும் தலைவர் ஸ்டாலினும் இதனை மன்னிக்க மாட்டார்கள் என்று கூறி, இந்த பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.



மேலும் செய்திகள்