< Back
மாநில செய்திகள்
3 மருத்துவகல்லூரிகள் அங்கீகாரம் ரத்து; டெல்லி செல்ல முடிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில செய்திகள்

3 மருத்துவகல்லூரிகள் அங்கீகாரம் ரத்து; டெல்லி செல்ல முடிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினத்தந்தி
|
31 May 2023 11:23 AM IST

தமிழ்நாட்டில் 3 மருத்துவகல்லூரிகள் அங்கீகாரம் ரத்து விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய பின் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 3 மருத்துவகல்லூரிகள் அங்கீகாரம் ரத்து விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய பின் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்குவோம் என்று சொல்லுவது ஏற்புடையதல்ல. குறை உள்ளது என தெரிந்தால் அரசு நிச்சயம் அதை சரி செய்யும்.

தமிழ்நாட்டில் 3 மருத்துவகல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாளை முதல்-அமைச்சரிடம் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி செல்ல முடிவு செய்துள்ளதாக கூறினார்.

மேலும் செய்திகள்