< Back
மாநில செய்திகள்
சென்டிரல் ரெயில் நிலையத்தில் தடம்புரண்ட ரெயில் பெட்டிகள் - திடீரென பின்னோக்கி நகர்ந்ததால் சம்பவம்
சென்னை
மாநில செய்திகள்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் தடம்புரண்ட ரெயில் பெட்டிகள் - திடீரென பின்னோக்கி நகர்ந்ததால் சம்பவம்

தினத்தந்தி
|
11 Aug 2022 10:29 AM IST

சென்டிரல் ரெயில் நிலையத்தில் திடீரென பின்னோக்கி நகர்ந்ததால் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 3 மணிக்கு யார்டிலிருந்து 6 பெட்டிகள் கொண்ட ரெயில் நடைமேடை 3-இல் வந்து நின்றது. அந்த ரெயில் திடீரென பின்னோக்கி நகர்ந்தது. இதில் ரெயிலின் கடைசி பெட்டி மட்டும் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதனால் கடைசியில் இருந்த 3 பெட்டிகளையும் சரி செய்து 3.50 மணிக்கு மீண்டும் தண்டவாளத்தில் கொண்டுவந்து நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த ரெயில் பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்