< Back
மாநில செய்திகள்
தேவர் குருபூஜையை முன்னிட்டு  சுவரொட்டி, பேனர்களுக்கு அனுமதி இல்லை துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தேவர் குருபூஜையை முன்னிட்டு சுவரொட்டி, பேனர்களுக்கு அனுமதி இல்லை துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
21 Oct 2023 12:45 AM IST

தேவர் குருபூஜையை முன்னிட்டு சுவரொட்டி, பேனர்கள் வைக்க அனுமதி இல்லை என துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

கமுதி

ஆலோசனை கூட்டம்

கமுதியில் ஆட்டோ டிரைவர்கள், வாடகை வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள், பதாகை அச்சக உரிமையாளர்கள், தண்ணீர் வண்டி டிரைவர்கள் ஒலிபெருக்கி உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- வருகிற 30-ந் தேதி நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் கட்சி சமுதாய அமைப்புகள் சார்பில் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை.

மேலும், வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் ஆட்டோ, வாடகை வாகனங்களை கமுதியில் இருந்து பசும்பொன்னிற்கு இயக்கக்கூடாது.

அனுமதி இல்லை

மேலும், சுவரொட்டிகள், பேனர்கள் வைக்க அனுமதியில்லை. குருபூஜை முடியும் வரை அனைத்து தரப்பினரும் போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போலீசாரின் உத்தரவுகளை மீறி செயல்படும் வாடகை வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவது மட்டுமல்லாமல் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்