< Back
மாநில செய்திகள்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார்: அமைச்சர் பொன்முடி
மாநில செய்திகள்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார்: அமைச்சர் பொன்முடி

தினத்தந்தி
|
30 Sept 2024 7:11 AM IST

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தி.மு.க.வின் சாதனைகளை கிராமங்கள் தோறும் வீடு, வீடாக சென்று அங்குள்ள பெண்களிடம் விளக்கி கூறி அவர்களை கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். கடந்த 3 மாதத்திற்கு முன்பு விழுப்புரம் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் பொன்கவுதம சிகாமணி தலைமையில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அதனை ஏற்று துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக சிறப்பாக செயல்படுவார்.அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்