< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வினேஷ் போகத்திற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
|8 Oct 2024 7:40 PM IST
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை,
அரியானா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வினேஷ் போகத்துக்கு தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அரியானாவில் ஜுலானா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதற்காக இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும் காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மக்கள் பிரதிநிதியாக மக்கள் சேவையின் இந்த புதிய அத்தியாயத்தில் அவர் மகத்தான வெற்றி பெற வாழ்த்துகள். பாசிச சக்திகளுக்கு எதிராக அவரது ஆன்மாவும் ஆற்றலும் அவரை பின் தொடரட்டும்" என்று அதில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.