< Back
மாநில செய்திகள்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்:  27-ந்தேதி நடக்கிறது
மாநில செய்திகள்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்: 27-ந்தேதி நடக்கிறது

தினத்தந்தி
|
24 Feb 2023 4:53 AM IST

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட இருக்கிறது.

சென்னை,

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் இணைந்து "வைப்பு நிதி உங்கள் அருகில் (நிதி ஆப்கே நிகட்) 2.0" என்ற பெயரில் குறைதீர்க்கும் முகாமை நடத்துகிறது. இந்த குறைதீர்க்கும் முகாம் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இந்த முகாம் நடத்தப்பட இருக்கிறது.

சென்னையில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம், எண்.356, டி.எம்.எஸ். இணைப்பு கட்டிடம், ஆடிட்டோரியம் தரைத்தளம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரியில் நடக்கிறது. இதேபோல், புதுச்சேரியில் கலிதீர்த்தாள்குப்பம், ஸ்ரீமணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையிலும், காரைக்காலில் டி.ஆர்.பட்டினத்தில் புதுச்சேரி பவர் கார்ப்பரேஷனிலும் நடைபெற உள்ளது.

முகாமில், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுடைய முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் தொடர்பான விளக்கம் அளித்தல் உள்பட குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்