திருவாரூர்
துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்
|துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்
அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என திருவாரூர் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், சுரங்கம்-புவியியல்துறை இயக்குனர் நிர்மல்ராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். தொடர்ந்து அனைத்து துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து துறைவாரியாக ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கூறியதாவது:-
துறை அலுவலர்கள் முனைப்புடன்
அரசு அனைத்து தரப்பினரும் பயன் அடைகின்ற வகையில் பல துறைகளின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணித்து குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, உதவி கலெக்டர் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தனாமணி (மன்னார்குடி), கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.