திருவாரூர்
உணவுப்பொருள் வழங்கல்-நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆய்வுக்கூட்டம்
|மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது.
மன்னார்குடி:
மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜீவானந்தம், வட்ட வழங்கல் அலுவலர் மகேஷ், கூட்டுறவு சார்பதிவாளர் பிரபா ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில், மன்னார்குடி பகுதியில் முக்கிய பிரச்சினைகளான ரேஷன் கடைகளில் மண்ணெண்னை தட்டுப்பாடு, கோதுமை தட்டுப்பாடு.கடைத்தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை செய்ய வேண்டும். தற்போது மன்னார்குடியில் ஏற்பட்டுள்ள பட்டா மாறுதலுக்கான தடைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மன்னார்குடி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க தலைவர் பத்மநாபன் கூறினார். கடந்த மாதம் கூறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகி வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.