< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விடைத்தாள் திருத்தும் பணி: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு
|18 April 2023 10:28 AM IST
தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைகள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும். தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும். ஆங்கில வழி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டும். தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை அனுப்ப தவறினால் அந்த பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு வரும் 19ம் தேதிக்குள் நியமன ஆணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.