< Back
மாநில செய்திகள்
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று... டி.எஸ்.பி பதவிக்கு தேர்வாகிய பல் மருத்துவர்
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று... டி.எஸ்.பி பதவிக்கு தேர்வாகிய பல் மருத்துவர்

தினத்தந்தி
|
7 Aug 2022 12:47 AM IST

வீட்டில் இருந்த படியே குரூப்-1 தேர்வுக்கு கடினமாக படித்து வந்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்வான பெண்ணுக்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கட்டாலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான பாண்டீஸ்வரி, வீட்டில் இருந்த படியே குரூப்-1 தேர்வுக்கு கடினமாக படித்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்வாகி, சொந்த ஊர் திரும்பிய அவருக்கு, ஊர் பொதுமக்கள் சார்பாக மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்