சதுரகிரி மலை ஏற அனுமதி மறுப்பு: ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்
|மலைப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
நேற்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலை ஏறிச்செல்ல ஏற்கனவே வனத்துறையினர் அனுமதி அளித்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு நின்று பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.