< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பு
|3 May 2023 11:53 PM IST
கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் இரவு நேரங்களில் நடைபெறும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளின் போது இளைஞர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே அரியலூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் ஆடல்- பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.