< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை
மாநில செய்திகள்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை

தினத்தந்தி
|
12 Sept 2023 5:01 PM IST

டெங்கு பரவல் தடுப்பு குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கால்நடைத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு, டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சைகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்