< Back
மாநில செய்திகள்
டெங்கு தடுப்பு நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

டெங்கு தடுப்பு நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை

தினத்தந்தி
|
16 Sept 2023 8:45 AM IST

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 8-ந்தேதி முதல் நேற்று வரையில் (14-ந்தேதி) 120 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு சராசரியாக 15 முதல் 20 வரை பதிவாகி வருகிறது.

பாதிப்பு அதிகரித்து வருவதால் வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல, டெங்கு தடுப்பு பணிகளை கிராமங்கள் தோறும் சென்று மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்துகிறார். டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஓமந்தூரார் மருத்துவமனையில் மாநில அளவிலான கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

மேலும் செய்திகள்