< Back
மாநில செய்திகள்
டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
27 Sep 2023 2:02 PM GMT

பையூர் கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஆரணி

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த பையூர் கிராமத்தில் ஒட்டுமொத்த தூய்மை பணி இயக்கம் நடைபெற்றது. தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் டெங்கு நோய் தடுப்பு களப்பணியாளர்களை கொண்டு கிராமத்தில் அனைத்து வீதிகளில் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு மருத்துவர் மேஜர் சிவஞானம், நடமாடும் மருத்துவ அலுவலர் ராஜ்குமார், பையூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டெங்கு நோய் தடுப்பு களப்பணியாளர்களுடன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உள்ள 100 பணியாளர்கள் ஏடிஸ் கொசுப்புழு உருவாகும் இடங்களை கண்டறிந்து கொசுப்புழு அழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காய்ச்சல் மற்றும் சிறுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

டெங்கு நோய் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை ஒலிபெருக்கி மூலம் நடமாடும் வாகனத்தை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, மருத்துவமல்லா மேற்பார்வையாளர் அருளரசு, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேசன், கார்த்திகேயன், ஜெனு ஆண்டனி, பாலசந்தர், மணிமாறன், பிரசன்ன குமார், ஊராட்சி மன்ற செயலாளர் திருமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்