< Back
மாநில செய்திகள்
டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
3 Oct 2023 12:15 AM IST

கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கொள்ளிடம்:

கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரிலும், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அஜித்பிரபுகுமார் அறிவுறுத்தல் படியும் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு. வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் கருணாகரன் வரவேற்றார். அரசு டாக்டர் சுஜிதா முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் பேசினார். முகாமில் வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் கொளஞ்சியன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் தவபாலன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி தாமரைச்செல்வி நன்றி கூறினார்

மேலும் செய்திகள்