< Back
மாநில செய்திகள்
டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மனு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மனு

தினத்தந்தி
|
7 Feb 2023 12:12 AM IST

4 மாத சம்பளம் வழங்ககோரி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மனு அளித்து உள்ளனர்.

பரமக்குடி ஒன்றியம் அனைத்து டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் ஏராளமானோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் 30 பேர் பரமக்குடி ஒன்றியம் 39 ஊராட்சிகளுக்கு உட்பட்ட வீடுகள் தோறும் சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். சுகாதார ஆய்வாளர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் கண்காணிப்பில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஒன்றிய நிதியில் இருந்து தனித்தனியாக வங்கி கணக்கிற்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் எங்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. 4 மாதமாக சம்பளம் வழங்கப்படாத நிலையிலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம். சம்பளம் வழங்க கோரி பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் மற்றும் ஆணையாளரிடம் கேட்டபோதும் ஊதியம் வழங்க நிதி இல்லை என்று கூறி வருகின்றனர். எங்களுக்கான நிதியை வேறு பணிக்கு மாற்றிவிட்டு எங்களுக்கு சம்பளம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, எங்களின் வாழ்வாதாரம் கருதி எங்களுக்கான சம்பளத்தினை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்