< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
|11 Nov 2023 1:51 PM IST
தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைகளில் 2 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
"தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. வறட்டு இருமல் பாதிப்பு தற்போது பரவி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைகளில் 2 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கையை தொடங்கிவிட்டது. புதுக்கோட்டை பல் மருத்துவக்கல்லூரியை வருகிற 15-ந்தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.