< Back
மாநில செய்திகள்
டெங்கு, இன்புளூயன்சா விழிப்புணர்வு முகாம்
அரியலூர்
மாநில செய்திகள்

டெங்கு, இன்புளூயன்சா விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
26 Sept 2022 12:06 AM IST

சிறுவலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு, இன்புளூயன்சா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் சிறுவலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு, இன்புளூயன்சா விழிப்புணர்வு முகாம் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருண் பிரகாஷ் கலந்து கொண்டு பேசுகையில் தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு, இன்புளூயன்சா தொற்று பரவி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு சென்று உரிய மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் 3 அல்லது 4 நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் பற்றி பொதுமக்களோ, மாணவர்களோ அச்சப்பட தேவையில்லை. தற்போது மழைக்காலம் நெருங்குவதால் பள்ளி மற்றும் வீடுகளின் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதால் கொசுக்கடியில் இருந்து கொசுவலை, கொசு மருந்து கிரீம்களை பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், அருண்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்