< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்
|30 Sept 2023 12:15 AM IST
கீழ்வேளூர் அருகே டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றியம் நாகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் நேதாஜி சாரணர் படையை சேர்ந்த மாணவர்கள், வீடுகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள இடங்களை சுத்தம் செய்தனர். ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பசுமை படை மாணவர்கள் பொது மக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.