< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
|24 Sept 2023 12:15 AM IST
பெருந்தோட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நட்நதது.
திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் அஜித் பிரபு குமார் உத்தரவின் பேரில், சீர்காழி வட்டார சுகாதாரத் துறை சார்பில் பெருந்தோட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம்மோகன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் துரை கார்த்திக், அபிமன்யு உள்பட பலர் கலந்து கொண்டனர்.