< Back
மாநில செய்திகள்
சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி உடலில் கட்டுபோட்டு நூதன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி உடலில் கட்டுபோட்டு நூதன ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
30 July 2023 2:06 PM IST

சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி உடலில் காயங்களுக்கான கட்டுகளை போட்டு பொதுமக்கள நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலம் சர்வீஸ் சாலை பகுதியில் கடந்த ஆண்டு மழைநீர் வடிகால் கட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் பணிகள் முடிக்கப்படாததால் அந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

எனவே நெடுஞ்சாலைத்துறை உடனடியாக குண்டும், குழியுமான சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி குரோம்பேட்டை பகுதி மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் சமூக ஆர்வலர் சந்தானம் தலைமையில் உடலில் காயங்களுக்கான கட்டுகளை போட்டு பொதுமக்கள நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலையை சீரமைக்க வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்