< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி

தினத்தந்தி
|
9 Jan 2023 6:45 PM GMT

பெரிய பகண்டையில் விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி நடந்தது.

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் வட்டாரம் பெரியபகண்டை கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நெற்பயிருக்கு டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் மோகன்சகாயராஜ் கலந்துகொண்டு கூறுகையில், நானோ திரவ யூரியா பயன்படுத்துவதன் மூலம் பயிர் விளைச்சலை மேம்படுத்துவதோடு, மண்ணின் பாதிப்பையும் குறைக்கின்றது. சாதாரணமாக யூரியாவை மண்ணில் அடி உரமாகவோ, மேல் உரமாகவோ இடும்போது 30 முதல் 35 சதவிகித சத்துதான் பயிருக்கு கிடைக்கிறது. எனவே டிரோன் மூலம் நானோ யூரியாவை பயிருக்கு தெளிக்க வேண்டும். டிரோன் மூலம் உரம் தெளிக்கும்போது ஏக்கருக்கு ரூ. 500 முதல் ரூ.600 வரை மட்டுமே செலவாகும் என்றார். தொடர்ந்து டிரோன் மூலம் எவ்வாறு நானோ யூரியா தெளிக்க வேண்டும் என்பது பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில்

வேளாண்மை அலுவலர் புஷ்பவள்ளி, வேளாண்மை துணை அலுவலர் அன்பழகன், உதவி வேளாண்மை அலுவலர் முகமது நசுருல்லாகான், அட்மா திட்ட அலுவலர் மணிவேல் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்