< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
|19 Jun 2022 9:40 PM IST
அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது
இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் எஸ்.யு.சி.ஐ. கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.