< Back
மாநில செய்திகள்
மத்திய அரசை கண்டித்து 4-ந் தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் எம்.பி. அறிவிப்பு
மாநில செய்திகள்

மத்திய அரசை கண்டித்து 4-ந் தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் எம்.பி. அறிவிப்பு

தினத்தந்தி
|
1 Jan 2024 2:13 AM IST

தமிழகம் முழுவதும் வருகிற 4-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உளளது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று காலை வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் வருகிற 4-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உளளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்காததை கண்டித்தும், நிவாரண நிதியாக வழங்க கோரிய ரூ.21 ஆயிரம் கோடியை வழங்கக்கோரியும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தாமல் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்