< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
பவானியில் சிறுபான்மை அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
|28 Aug 2023 3:47 AM IST
பவானியில் சிறுபான்மை அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
பவானி
மணிப்பூர் கலவரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து பவானி தாலுகா அனைத்து சிறுபான்மை அமைப்புகள் சார்பில் பவானியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பவானி சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலய போதகர் விக்டர் ராஜ் தலைமை தாங்கினார். இயேசுவின் ஆறுதல் சபை அற்புதராஜ், சீயோன் சத்தம் ஊழியங்கள் சிஸ்வா ஜென்ஸ், ஊழியர் துரைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் பேராயர் ஜான் விஸ்வநாதன், போதகர் ஜோடேவிட், மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வக்கீல் ஜைனுல் ஆபிதீன், பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட தேவாலயங்களின் போதகர்கள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்பட பலா் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.