காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் மணிப்பூர் வன்முறையை கண்டித்து தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
|காஞ்சீபுரத்தில் மணிப்பூர் வன்முறையை கண்டித்து தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க மகளிர் அணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, காஞ்சீபுரம் காவலான் கேட் பகுதியில் காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீ தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கலந்து கொண்டு மணிப்பூர் கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும், குற்ற சம்பவத்திற்க்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன உறையாற்றினார்.
இதில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் அன்பழகன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நித்யா சுகுமார் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மகளிர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில்
இதைபோல செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மணிப்பூர் அவலத்தை கண்டித்தும், அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்திட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் உருவ படங்களை அகற்ற உத்தரவிட்ட நீதிமன்ற பதிவாளரை உடனடியாக பதிவு நீக்கம் செய்ய கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் செங்கல்பட்டு மைய மாவட்ட செயலாளர் செங்கை. தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புச் செல்வன், மாவட்ட மகளிர் அணி அமைப்பு செயலாளர் காஞ்சனா, காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், முன்னிலை வகித்தனர்.