< Back
மாநில செய்திகள்
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து 23-ந்தேதி ஆர்ப்பாட்டம்- சீமான்
மாநில செய்திகள்

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து 23-ந்தேதி ஆர்ப்பாட்டம்- சீமான்

தினத்தந்தி
|
20 Aug 2024 2:33 AM IST

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து 23-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கொல்கத்தாவில் மருத்துவத் தங்கை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறையும், மகளிர் பாசறையும் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 23-08-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் சரியாக 02 மணிக்கு, சென்னை எழும்பூர், இராஜரத்தினம் திடல் அருகில் நடைபெறும். மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்