திருவாரூர்
மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம்
|மாமூல் தராததால் ஓட்டலை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மன்னார்குடி வர்த்தக சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மன்னார்குடி:
மன்னார்குடி வ.உ.சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு மாமூல் தராததால் 3 வாலிபர்கள் அரிவாளுடன் புகுந்து வாடிக்கையாளரை அரிவாளால் வெட்டினர். பின்னர் ஓட்டலை சூறையாடினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று மன்னார்குடி வர்த்தக சங்க கூட்டம் தலைவர் ஆர்.வி.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பு செயலாளர் எஸ்.எம்.டி, கருணாநிதி, செயலாளர் ஏ.பி. அசோகன், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிவாளுடன் வந்து ஓட்டலை சூறையாடியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்