< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
விருதுநகரில் ஆர்ப்பாட்டம்
|19 Oct 2023 5:12 AM IST
இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் முன்பாக பி.எஸ்.என்.எல். ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பாலஸ்தீனத்தின் மீது கொடூர தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் இளமாறன் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் பேசினார். இதில் மாநிலத்தலைவர் சமுத்திரக்கனி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு இணைக் கன்வீனர் வளர்மங்கை, முன்னாள் மாவட்ட செயலாளர் குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.