< Back
மாநில செய்திகள்
திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
4 April 2023 2:55 PM IST

திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருத்தணி ஒன்றிய தலைவர் உஷாராணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் மணிகண்டன் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.1 லட்சம் பணிக்கொடையை ரூ.5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். பின்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானத்திடம் மனுவாக அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். முடிவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் பானு நன்றி உரையாற்றினார்.

மேலும் செய்திகள்