< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
|24 July 2022 8:23 PM IST
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21 ஆம் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 6 மீனர்களையும் கைது செய்து இலங்கையின் வவுனியா சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை சிறைவைக்க இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் 800-க்கும் மேற்பட்ட படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ராமேஸ்வர்ம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.