< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் பெண்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் பெண்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
29 July 2023 3:17 AM IST

நாகர்கோவிலில் பெண்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்:

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்த உண்மை குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும். அந்த குற்றவாளிகள் மீது தகுந்த பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உரிய முறையில் துரிதமாக வழக்கை கையாண்டு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கி தர வேண்டும். மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய-மாநில பா.ஜனதா அரசை கண்டித்து குமரி மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பு தலைவி சகுந்தலா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுஜா, ஜெய்னி, அல்போன்சா உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

---

மேலும் செய்திகள்