< Back
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
26 April 2023 2:41 AM IST

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கடத்தல் கும்பல் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து லூர்து பிரான்சிசை வெட்டி கொலை செய்தனர். எனவே அவரை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகேஸ்வரகாந்த் தலைமை தாங்கினார். பொருளாளர் ஈஸ்வரி, வட்டத் தலைவர் மகாதேவன் பிள்ளை, செயலாளர் சிவசங்கர், பொருளாளர் ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

இதுபோல் தோவாளை வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்