< Back
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
26 March 2023 12:15 AM IST

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் செல்வேந்திரன் தலைமை தாங்கினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பவேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை உடனே வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வட்டத்தலைவர் கார்த்திகேயன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்