< Back
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
24 March 2023 6:45 PM GMT

விழுப்புரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் ஜெயராமன், செய்தி தொடர்பாளர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும், பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வட்ட நிர்வாகிகள் நந்தகுமார், பார்த்திபன், ராமதாஸ், லோகநாதன், அய்யப்பன், மணவாளன், பாரதிராஜா, ராஜேஷ்பாண்டியன், ஜம்புகாந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் மணிபாலன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்