< Back
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
25 March 2023 12:30 AM IST

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும், பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மேற்கு மண்டல செயலாளர் சசி கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் சங்க நிர்வாகி ஒருவர் கோரிக்கைகளை பாடலாக பாடினார். இதில் மாவட்ட இணை செயலாளர் சிவபிரகாஷ் மற்றும் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு சங்க பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்