< Back
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
13 March 2023 6:45 PM GMT

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில பொருளாளர் முத்துச்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேர்ம பாண்டியன், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் கார்த்திகை ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு தொகையை மீண்டும் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும், சி.பி.எஸ். ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் வட்ட செயலாளர் மகேந்திர குமார் நன்றி கூறினார்.

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலா்கள் சங்க வட்டார தலைவா் முருகேசன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளா் கணேசன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட பொருளாளா் வள்ளி, வட்டார துணைத்தலைவா் சங்கரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் கிராம நிர்வாக அலுவலா் ஷாஜகான் நன்றி கூறினார்.

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணை செயலாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ராஜ்குமார், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்